அமைச்சர் பந்துலவின் செயலருக்கும் கொரோனாத் தொற்று!
அமைச்சர் பந்துலவின் செயலருக்கும் கொரோனாத் தொற்று!
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தனவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும், அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று பகல் அவர் ஒரு மருத்துவ நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும், வர்த்தக அமைச்சில் உள்ள அவரது அலுவலக அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவருடன் தொடர்புகளைப் பேணியதன் காரணமாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அந்தச் சோதனை முடிவுகள் இன்றிரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது