சென்னையில் இடம்பெறும் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி.
சென்னையில் இடம்பெறும் இந்தியா இங்கிலாந்து
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடனான சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பியிருக்கும் நிலையில் இந்திய அணியானது தங்களுடைய அடுத்த இருதரப்பு கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் சந்திக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில் தற்போது இந்திய அணியுடன் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்திருக்கிறது. சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களும் நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 5ஆம் திகதியும், 2ஆவது டெஸ்ட் போட்டி 13ஆம் திகதியும் சென்னையில் நடைபெற உள்ளது.
தற்போது முழு உலகிலும் காணப்படுகின்ற கொ ரோ னா வை ர ஸ் தாக் கம் காரணமாக நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டிகளில் சில நாடுகளில் அரைவாசி ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், சில நாடுகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில் இந்தியாவில் நடைபெறுகின்ற இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் சோ கம் அடைந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதாவது சென்னையில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்நாடு ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்திய ரசிகர்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே 50 சதவீதமான ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். குறித்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கான டிக்கெட்டுகளை விரைவில் வினியோகம் செய்யும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.