இலங்கை கிரிக்கெட் அணியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்கள்.
இலங்கை கிரிக்கெட் அணியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்கள்.
அனைத்து விளையாட்டு வீரர்களுக்குமான கொடுப்பனவுகளை வழங்கும் போது வீரர்களின் திறமையின் அடிப்படையில் கொடுப்பனவுகளை வழங்கும் முறைமையை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு பேரவையானது நேற்று முன்தினம் கொழும்பில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் தொடர் 5 முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.
புதிய கிரிக்கெட் தேர்வுக்குழுவை அமைத்தல், உள்ள10ர் மற்றும் மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளை முன்னெடுத்தல், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் உடற்தகுதிக்கு முன்னுரிமை வழங்குதல், வீரர்களின் செயற்றிறனை மையமாக வைத்து ஒப்பந்தங்களை மேற்கொள்ளல் மற்றும் கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளருக்கு உதவுவதற்காக பணிப்பாளர் மற்றும் வழிகாட்டி ஆகியோரை நியமித்தல் ஆகிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறை அமைச்சின் உத்தரவாக, அனைத்து விளையாட்டுகளுக்கும் இந்த முறைமையின் அடிப்படையில் செயற்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளிநாடு செல்வதாயின், அது வெற்றிபெறுவதற்காகவே என்பதை வீரர்கள் நினைவிற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார். இதன் போது தேசிய விளையாட்டு பேரவையின் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவும் கலந்துகொண்டார்.