சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.
73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.
சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனினதும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தினதும் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும் கிளைப்பிரிவினருக்கு மூலிகை மரக்கன்றுகள் இன்று(02) மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்சவின் சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம் எனும் கோட்பாட்டுக்கமையவும் வளமான நாடு சுகாதாரமான சுற்று சூழல் என்ற தொனிப்பொருளுக்கமையவும் இம் மூலிகை மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம் மூலிகை கன்றுகளை தங்கள் வீடுகளிலே நட்டு சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் நாட்டை வளம் மிக்க நாடாக மாற்ற வேண்டும் என மாவட்ட விவசாய பணிப்பாளர் கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் கலிஸ் மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன் மாவட்ட விவசாயக் கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக கிளைப்பிரிவினரும் கலந்து கொண்டனர்.