எரிவாயுவில் ஏற்பட்ட புகையின் பாதிப்பால் 40 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

BOI கட்டுநாயக்கா வர்த்தக வலயத்தில்
உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையைச் சேர்ந்த 40 ஊழியர்கள், அருகிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட புகையின் பாதிப்பால் சுவாசிப்பதில் சிரமத்தால்
நீர் கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பேச்சாளர் சற்று முன் தெரிவித்திருந்தார்.