தடைகளை உடைத்து அடை மழைக்குள் தமிழர்களின் அகிம்சை போராட்டம் ஆரம்பம்!
தடைகளை உடைத்து அடை மழைக்குள் தமிழர்களின் அகிம்சை போராட்டம் ஆரம்பம்!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை அம்பாறை பொத்துவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதே பொலிஸார் நீதிமன்றத் தடையுடன் வந்தனர். பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்துக்கே நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இன்று பொத்துவில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவணியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் வரும் 6 ஆம் திகதி பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு- கிழக்கு மாகாண சமயத்தலைவர்கள் ,சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும்,ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பலசமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையை நடைமுறை படுத்த கோரியும்,மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்ந்தக் கோரியும் ,முஸ்லீம் மக்களின் மதநம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை அம்பாறை பொத்துவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதே பொலிஸார் நீதிமன்றத் தடையுடன் வந்தனர். பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்துக்கே நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இன்று பொத்துவில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவணியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் வரும் 6 ஆம் திகதி பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு- கிழக்கு மாகாண சமயத்தலைவர்கள் ,சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும்,ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பலசமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையை நடைமுறை படுத்த கோரியும்,மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்ந்தக் கோரியும் ,முஸ்லீம் மக்களின் மதநம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.