மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 73 வது சுதந்திர தின நிகழ்வு நடைபெறவுள்ளது.
நாளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 73 வது சுதந்திர தின நிகழ்வு நடைபெறவுள்ளது.
நாளை காலை 8.00 மணிக்கு தேசியகொடி ஏற்றும் நிகழ்வு மாவட்டசெயலகத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நாடாத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுளதாகவும் வழமைபோன்று படையினரின் அணிவப்புகள் இன்றியதாகவும் கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைக்குட்பட்டதாக நடாத்தப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்;ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனினதும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தினதும் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் நாளை அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவான முறையில் தேசிய கொடி ஏற்றலும் தேசிய கீதம் இசைத்தல் அதனை தொடர்ந்து அதிதிகள் உரையும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட செயலக வளாகத்தின் சுற்றுப்புறச்சூழலை சுத்தம் செய்வது நகரப்பகுதியின் பஸ்தரிப்பு நிலையத்தின் வாவிக்கரை பகுதியினை சுத்திகரிப்பது மற்றும் பயன் தரும் பழமரக்கன்றுகளை நடும்; நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்சவின் சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம் எனும் கோட்பாட்டுக்கமையவும் வளமான நாடு சுகாதாரமான சுற்று சூழல் என்ற தொனிப்பொருளுக்கமையவும்; மூலிகை மரக்கன்றுகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.