கிளிநொச்சியில் சிறுவர் அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தின் 2021ம் ஆண்டுக்கான மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு கலந்துரையாடல் மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் சிறுவர்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
குறிப்பாக சிறுவர்களின் பாதுகாப்பு மாணவர்களின் பாடசாலை வரவின்மை இடைவிலகல் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றுவரும் தற்கொலைகள் தற்கொலை முயற்சிகள் கர்ப்பவதிகளுக்கான போசாக்கு பொதி விநியோகம் முன்பள்ளி சிறுவர்களுக்கான காலை உணவு வழங்குதல் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை நடவடிக்கைகள் பிறப்புச்சான்றிதழ் இல்லாத சிறுவர்களிற்கு அதனை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சிறுவர்கள் தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு தடையாக உள்ள காரணிகள் தொடர்பிலும் அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் உதவி மாவட்டச்செயலர் வலயக்கல்விப்பணிப்பாளர் தாய் சேய் நலன் வைத்திய அதிகாரி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள் தொழிற்திணைக்கள அதிகாரி மாவட்ட மற்றும் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் நன்னடத்ததை உத்தியோகத்தர்கள் சமூக சேவை உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் தொழிற்பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உத்தியோகத்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.