சுதந்திர தின நிகழ்வுக்கான இறுதிக்கட்ட செயற்பாடுகள் நிறைவு.
சுதந்திர தின நிகழ்வுக்கான இறுதிக்கட்ட செயற்பாடுகள் பூர்த்தி.
எதிர்வரும் 73ஆவது சுதந்திர தின வைபவத்தின் ஒத்திகை நிகழ்வுகள் நேற்று காலை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்வினை நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ மீளாய்வு செய்தார்.
அமைச்சருடன் இணைந்து பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோர் ஒத்திகை நிகழ்வு தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.
படையினரின் அணிவகுப்பு, இராணுவ ஏற்பாடுகள், கவச வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள், விமான காட்சி, கலாச்சார நிகழ்வுகள், ஆசன ஏற்பாடுகள் போன்ற ஏற்பாடுகளை ஜெனரல் குணரத்ன கவனமாக மீளாய்வு செய்தார்.
இதன்போது இந்த நிகழ்வினை மேலும் சிறப்பாக முன்னெடுக்க தேவைப்படும் பகுதிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
1129இந்த மீளாய்வு நிகழ்வில் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) பிபிஎஸ்சி. நோனிஸ், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்ன, விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பதிரன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, அரச அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.