கோட்டாபயவின் உருவப் பொம்மையை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

கோட்டாபயவின் உருவப் பொம்மையை
எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலவசக் கல்விக்கான மாணவர் இயக்கத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் இணைந்திருந்தனர்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப்புள்ளி குழறுபடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நுழைவாயிலுக்கு முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோரின் உருவப் பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.