இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம்!

இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திரதினத்தையொட்டி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் ஒட்டிசுட்டான் முன்றலில் மரநடுகை நிகழ்வு இன்று(04) காலை 10.30மணிக்கு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு மரநடுகை வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

அதிமேதகு ஜனாதிபதியின் “சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம்” எனும் கோட்பாட்டிற்கமைய வளமான நாடு: சுகாதாரமான சுற்றுச்சூழல் எனும் தொனிப்பொருளிற்கமைய இம் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.