22 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசிய கிறிஸ் கெய்ல்.
வெறும் 22 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசிய கிறிஸ் கெய்ல்
கிரிக்கெட் உலகில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட அபுதாபி டி10 லீக் தொடரும் நடைபெற்று வருகிறது. நான்காவது தடவையாக நடைபெற்றுவரும் குறித்த லீக் தொடர் தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் மராத்தா அரபியன்ஸ்ஸ் மற்றும் டீம் அபுதாபி அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டீம் அபுதாபி அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மராத்தா அரபியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. டி10 போட்டிகளை பொறுத்தவரையிலே 97 ஓட்டங்கள் என்பது எதிரணியினருக்கு ஒரு இலகுவான வெற்றியாகவே கருதப்பட்டது. இவ்வாறான நிலையில் 98 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முழங்கிய டீம் அபுதாபி அணி 5.3 ஓவர்களில் 100 ஓட்டங்களை பெற்று குறித்த வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த போட்டியில் டீம் அபுதாபி அணியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான கிறிஸ் கெய்ல் மிக மிக அபாரமாக 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் அடங்கலாக மொத்தமாக 84 ஓட்டங்களை தெறிக்கவிட்டார்.
அந்த அளவுக்கு மிக அபாரமாக அமைந்திருந்தது போட்டி. இந்த போட்டி மராத்தா அரபியன்ஸ் அணி 10 ஓவர்களில் விளாசிய இந்த வெற்றி இலக்கை டீம் அபுதாபி அணி கிறிஸ் கெய்லின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி பெற்றது.