மாணவத் தலைவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!
இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சரவணபவன் தலைமையில் பாடசாலை மாணவத் தலைவர்கள், சிரேஷ்ட மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்பு தலைவர்களுக்கு பதவி வழங்கும், கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோட்டம் மூன்று கல்விப் பணிப்பாளர்களான தியாகச்சந்திரன், ஜோர்ஜ் வில்சன், மஸ்கெலியா சுகாதார அதிகாரி நரேந்திரன் பிள்ளை ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக மஸ்கெலியா பிரதேச சபையின் பிரவுன்லோ வட்டார உறுப்பினர் ராஜ் அசோக், கலாநிதி சதாசிவம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் விசேட அம்சமாக கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளும் கெளரவைக்கப்பட்டனர்.