பெண்ணின் விரலை வெட்டி மோதிரம் திருட்டு.

பலங்கொடையில் வயதான பெண்ணின் விரலை வெட்டி மோதிரம் திருட்டு.
பலங்கொடையில் நேற்று இரண்டு ஆண்கள் தனது மோதிரத்தை திருட விரலை வெட்டியதால் ஒரு வயதான பெண் காயமடைந்துள்ளார்.
இரண்டு பேரும் அந்த பெண்ணை அவரது இல்லத்தில் தாக்கிவிட்டு மோதிரத்தை திருடி அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்
குறித்த 83 வயதான பெண் தனியாக வசிப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அவர் பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களின் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கயிறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.