‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்தாண்டே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது.
இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாக உள்ளதாம்.
மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து, ஏராளமான முன்னணி நடிகர்கள் ஓடிடி முடிவை கைவிட்டு வரும் நிலையில், தனுஷ் படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையேயும், திரையுலகினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.