இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு கொரணா தொற்று உறுதி.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ ஊழியர்கள் 50 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 02 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கேகாலையில் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட கேகாலை பொலிஸின் போக்குவரத்து பிரிவின் உப பொலிஸ் பரிசோதகருக்கு மேற்கொண்ட ரெபிட் ஆண்டிஜன் பரிசோதனையில் குறித்த பொலிஸ் பரிசோதகருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது