கல்வித்துறையில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்.
வடமாகாண கல்வித்துறைசார் பிரச்சனைகள் தொடர் பான விசேட கலந்துரையாடல்
வடமாகாண கல்வித்துறையில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு அமைச்சர் G.L.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கிளிநொச்சி வலயம் இரண்டு கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டமைக்கான அனுமதிக் கடிதத்தினையையும், கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு smart classroom இற்கான கொரிய நாட்டின் அன்பளிப்பான 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுக்குரிய காசோலையையும், அமைச்சர் , வடமாகாண ஆளுநரிடம் கையளித்தார்.
பி.எஸ்.எம்.சாள்ஸ் வடமாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் பலவேறு பிரச்சனைகள் காணப்படுவதை, குறிப்பிட்ட துறைசார் நிறுவனங்களுக்கு அவர் சென்றிருந்த போது அவதானித்ததாகவும், மேலும் சில பிரச்சனைகள் குறித்த துறைசார் திணைக்களத் தலைவர்களால் அறிக்கையிடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்தவகையில் கல்வித்துறையில் அறிக்கையிடப்பட்ட பிரச்சனைகளை பிரதமர் மூலமாக கல்வி அமைச்சருக்கு அறிக்கை இடப்பட்டதாக தெரிவித்தார்.
அவற்றில் குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரதுறைகளில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும் மற்றும் ஆசிரியர்களுக்கு கஷ்டப்பிரதேசங்களுக்கு சென்று வருவதற்கான பயண வசதி குறைபாடுகள் காணப்படுவதாகவும், குறித்த கஷ்டப்பிரதேச பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சலுகை ஏற்பாடுகளை வரவு செலவு திட்டத்தினுள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொண்டால் சிறப்பாக அமையும் எனவும், மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மூலம் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)