பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பட்டது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 தமிழகர்கள் விடுதலையில் குடியரசுத்தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, திடீர் குண்டுடிவெடிப்பில் சிக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அமைக்கப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழன அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இவர்கள் விடுதலையில், குடியரசு தலைவர்தான் முடிவு செய்யவேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், மாநில ஆளுநரும் முடிவு செய்யலாம் என்று குடியரசு தலைவர் அலுவலகம் சார்பில் கூறப்பட்டது. இப்படி மாறி மாறி பேசிக்கொண்டிருந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானம் தொடர்பாக ஆளுநர் எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி பேரறிவாளன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக ஆளுநர் 7 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 7-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த வாரம் ஆளுநரை சந்தித்த தமிழக அமைச்சர்கள் 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஏழுதமிழர்கள் தொடபர்பாக ஆளுநரை சந்தித்தோம். ஆளுநர் யோசித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். இதனால் 7 தமிழகர்கள் விடுதலையில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று தமிழகத்தில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக ஆளுநர் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன் அவரது, கருணை மனு தொடர்பாக குடியரசுத்தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.