புதிய திட்டத்தின் படி மாதிரி வர்த்தக கூடங்களை பார்வையிட்டார் ஜனாதிபதி.
கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாதிரி வர்த்தக கூடங்களை இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டார்.
காலி முகத்திடலை மையமாகக் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக இந்த வர்த்தக கூடங்கள் அமைக்கப்படுகின்றன.
இலங்கை கடற்படை புதிய திட்டத்தின் படி இந்த மாதிரி வர்த்தக கூடங்களை வடிவமைத்துள்ளது. காலி முகத்திடலுக்கு அழகு சேர்க்கும் வகையில் இந்த வர்த்தக கூடங்களை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.