1000 ரூபா சம்பளம் – தொழிலாளர்களுக்கு வெறும் 13 நாட்களே வேலை !
தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளது. இன்று தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாலில் இந்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சில் இன்று (08) மாலை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சம்பள நிர்ணய சபை ,முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் ஆகியன இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கமைய 2021ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் படி தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்த முடியும் என்று அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா கலந்துரையாடலுக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
அடிப்படை சம்பளமாக 900 ரூபாயும் மற்றும் 100 ரூபாய் பட்ஜெட் கொடுப்பனவாக வழங்க இறுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில் யோசனைக்கு ஆதரவாக 11 வாக்குகளும், அதற்கு எதிராக 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை கம்பெனிகள் தோட்ட தொழிலாளர்களுக்கு வெறும் 13 நாட்களே வேலை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.