ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 762 பேருக்கு இதுவரை கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது
இலங்கையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் இன்று வரை ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 762 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவால் இலங்கைக்கு 5 இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவற்றை 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்குச் செலுத்த முடியும்.
அந்தவகையில் முதற்கட்டமாக கொரோனா ஒழிப்புப் பணியில் முன்கள பணியாளர்களாகச் செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்குக் கொரோனாத் தடுப்பூசி கடந்த 29ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டு வருகின்றது.
இதன்படி 29ஆம் திகதி 5 ஆயிரத்து 286 முன்களப் பணியாளர்களுக்கும், 30ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
அத்துடன், 4ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
6ஆம் திகதி 3 ஆயிரத்து 838 பேருக்கும், 7ஆம் திகதி 1,625 பேருக்கும், இன்று 5 ஆயிரத்து 989 பேருக்கும் கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.