ஐ.நாவின் தேவையை நிறைவேற்ற இலங்கை அரசு தயாராக இல்லை!- கெஹலிய
“இலங்கை அரசு ஐ.நா. மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இல்லை.”
– இவ்வாறு அமைச்சரைவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் குற்றச்சாட்டுக்களை அரசு முழுமையாக மறுக்கின்றது. அதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடைபெறவில்லை என்பதை பிரிட்டன் உள்துறை அமைச்சின் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.
புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்படும் பக்கச்சார்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
இலங்கையின் 30 வருட காலப் போரை நிறைவுக்குக் கொண்டுவந்த மனிதாபிமான நடவடிக்கையில் ஏதேனும் சட்ட விரோதச் செயற்பாடுகள் நடைபெற்றுள்ளதா என்பதை அரசு உள்ளக விசாரணையொன்றின் மூலம் கண்டறியவுள்ளது.
உள்ளக விசாரணைகளின்போது, ஏதாவது அநீதி இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது” – என்றார்.