கடந்த ஒரு வாரக் காலப்பகுதியில் நாட்டில் வாகன விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
கம்பஹா, கண்டி மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகப்படியான வாகன விபத்துக்கள்
கடந்த ஒரு வாரக் காலப்பகுதியில் நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 403 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 266 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, நாளாந்தம் 6 முதல் 7 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பதாகவும், 38 பேர் காயமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா, கண்டி மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகப்படியான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.