ஜோர்தான் நாட்டுக்கு தொழிலுக்காக சென்ற இலங்கையர்கள் நாடு திரும்பினர்.

ஜோர்தானில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பினார்கள்
ஜோர்தான் நாட்டுக்கு தொழிலுக்காக சென்று அந்நாட்டில் தொழில் வழங்குனர்களினால் துன்பங்களுக்கு இலக்காகி இலங்கைக்கு வரமுடியாமல் அந்நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை இலங்கை விமான சேவையின் விசேட விமானமொன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வர முடியாமல் வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றவர்களை இந்நாட்டிற்கு குழுக்களாக அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று 4.15 மணியளவில் இலங்கை விமான சேவையின் UL 554 என்ற விசேட விமானத்தின் மூலம் ஜோர்தானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.