காணாமல் போன தனியார் ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர் சடலமாக மீட்பு.

சில தினங்களுக்கு முன்னர் மினி வேர்ல்ட் எண்டில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 34 வயதான தினுர விஜேசுந்தர எனும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக 3 ஆவது நாளாக இராணுவ வீரர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஒரு முன்னணி தனியார் ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் தினுர விஜேசுந்தர, வார இறுதியில் மதுல்சிமா எனும் பகுதிக்கு சென்றிருந்தபோது காணாமல் போயுள்ளதாக அறியக்கிடைத்தது.
காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், கடுமையான மூடுபனி மற்றும் மோசமான வானிலை நிலைமைகளுக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இராணுவ அதிகாரிகள் ஏறக்குறைய 200 அடி செங்குத்துப்பாதையில் ஆய்வு செய்த பின்னர் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.