மே மாதத்திற்குள் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.

மே மாதத்திற்குள் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கொவிட் 19 ஆபத்தில்லாத சுறறுலாப்பயணிகளுக்கான நாடாளுமாறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஜேர்மனி இத்தாலியிலிருந்து வருகைதரவுள்ள சுற்றுலாப்பயணிகள் தொடர்பிலும் ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் மக்களிற்கு சுற்றுலாப்பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.