கொரோனாவால் மரணிப்போரை புதைப்பதற்கு அனுமதிக்கப்படும் : மஹிந்த ராஜபக்ஷ
கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார் .
முதன்மை சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இரசாங்க அமைச்சர் (டாக்டர்) சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்று பாராளுமன்றத்தில் கொவிட் வைரஸ் நீர் வழியாக பரவாது என நேற்று அறிவித்தபின், அது குறித்து ஐக்கிய மக்கள் சகத்தியின் எதிர்க்கட்சி எம்.பி. எஸ்.எம்.மரிக்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலழிக்கும் போதே பிரதமர் இதை தெரிவித்தார்.
அண்மைய காலங்களில் முஸ்லீம் கோவிட் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயமாக தகனம் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சி உட்பட பல்வேறு கட்சிகளால் கவலைகள் எழுப்பப்பட்டன.
ஒரு நிபுணர் குழு முன்னர் அடக்கம் செய்யப்பட்டதை நிராகரித்தது, வைரஸ் நீர் வழியாக பரவும் அபாயத்தை சுட்டிக்காட்டியது. ஆனால் இப்போது வைரஸ் நீர் வழியாக பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.