லீசிங் நிலுவைகள் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் பணிப்பு.
கொரோனா வைரஸ் காரணமாக செலுத்த முடியாத நிலையிலிருந்த லீசிங் நிலுவைகள் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பாடசாலை போக்குவரத்து சேவைகள், அலுவலக போக்குவரத்து சேவை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் தவணை நிலுவைகளை செலுத்துவதற்கு முறையான திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்பொழுது நாடு வழமை நிலைமைக்கு திரும்பியுள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தமது லீசிங் நிலுவைகளை சாதாரண விதத்தில் செலுத்துவதற்கான நிலைமை உருவாகியுள்ளது.
இதனால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த லீசிங் நிவாரண காலத்தின் நிலுவையையும் சேர்த்து தற்போது வழங்குமாறு லீசிங் நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களை கோரியுள்ள நிலையில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தம்மால் முடியாதென்றும் வாகன உரிமையாளர்கள் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.