இந்தோனேஷியாவின் இலங்கை திசையிலேயே நிலநடுக்கம்.

இந்தோனேஷியாவின் இலங்கை திசையிலேயே நிலநடுக்கம்.
இந்தோனேஷியா பெங்குலா பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
அதன்படி ,இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, இந்தோனேஷியாவின் இலங்கை திசையிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும்,நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.