இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில் அங்கு உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,013 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,985,161- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் 1,001- பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 851-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 20,18,844-லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.