தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து.

அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட தொழிற் சங்க நடடிவக்கையில் ஈடுபடவில்லை எங்களின் பிரச் சினைக்கு ஒரு தீர்வாக அமையவே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இது வரை தீர்க்கப்படாத பல பிரச் சினைகளுக்கு உடனடி தீர்வு காண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் தெரி வித்துள்ளார். குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து மற்றும் ரயில் சேவையில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.