ஒவ்வொரு கொரோனா நோயாளரும் நோய் காவியாகும் அபாயம்.
ஒவ்வொரு கொரோனா நோயாளரும் நோய் காவியாகும் அபாய நிலை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் , அது சமூக தொற்று இல்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலையில் ஒவ்வொரு கொரோனா நோயாளரும் மேலுமொரு நோயாளரை உருவாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது சமூக தொற்றாக உருவாகவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
சமூக தொற்றாக பரவும் பட்சத்தில் நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் ,எவ்வாறாயினும், தற்போது நாாளந்தம் சுமார் 900 நோயாளர்கள் மாத்திரமே தொற்றுடன் அடையாளம் காணப்படுவதால் இது சமூக தொற்றாக இல்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.