ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 40.27 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 40.27 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 10.79 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 23.66 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 40,27,748 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 553 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 35,38,422 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,10,639 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.