சம்பிக்க – சஜித் பிடுங்குப்பாடு!
சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவியொன்றை வழங்குவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜாதிக ஹெல உறுமய ஊடாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்காக ஹெல உறுமயவிலிருந்து விலகினார். பொதுச்செயலாளர் பதவியையும் துறந்தார்.
ஐக்கிய மக்கள் சகத்தியின் முதலாவது மத்திய செயற்குழுவில் பங்கேற்றிருந்தாலும் அந்தக் கட்சியின் உறுப்புரிமையை சம்பிக்க ரணவக்க இன்னும் பெறவில்லை. அவருக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பான அறிவிப்பு உறுதியாக வெளியான பின்னரே இணைவார் எனக் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், சம்பிக்கவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில் சஜித் அணி பரிசீலித்து வருகின்றது. இதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் தற்போது இழுபறி நிலை தொடர்கின்றது.
அதேவேளை, சம்பிக்க ரணவக்கவால் ‘43’ என்ற அரசியல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் சஜித் தரப்பை கிலிகொள்ள வைத்துள்ளது.