மன்னாரில் கொரோனாவால்வயோதிப் பெண் உயிரிழப்பு! வடக்கில் சாவு 5 ஆக உயர்வு.

மன்னாரில் கொரோனாவால்வயோதிப் பெண் உயிரிழப்பு! வடக்கில் சாவு 5 ஆக உயர்வு
மன்னாரில் வயோதிபப் பெண் ஒருவர் கொரோனாத் வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண், கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் தொடர்பில் இருந்தவர் என்றும் அவர் கூறினார்.
சிலாவத்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய குறித்த பெண், வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் மன்னார் பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்போதே அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த பெண்ணின் மரணத்துடன் மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றால் ஏற்ட்ட உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது.