திருக்குர்ஆன் – பாகம் 1
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள முக்கிய போதனைகளின் முதல் பகுதி பின்வருமாறு:
1. ஒப்பந்தங்களை முறித்துமாறு செய்யக் கூடாது.
2. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும்.குர்ஆன் 2:27,47:22
3. உண்மையை பொய்யுடன் கலக்கக் கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது. குர்ஆன் 2:42
4. நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.குர்ஆன் 2:44 61:2
5. பூமியில் குழப்பம் செய்து திரியக் கூடாது.குர்ஆன் 2:60
6. ஆன்மீக ஏமாற்றல் செய்து பிழைக்கக் கூடாது. குர்ஆன் 2:79
7. பெற்றோருக்கும், நெருங்கிய உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும். மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும். குர்ஆன் 2:83
8. வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது. குர்ஆன் 2:84
9. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்னியுங்கள். குர்ஆன் 2:109
10. நல்லவற்றை/ தூயவற்றையே சாப்பிட வேண்டும். குர்ஆன் 2:168 ,172
11. முன்னோரை குருட்டுத்தனமாக பின்பற்றக் கூடாது. குர்ஆன் 2:170
12. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும், அடிமைகளுக்கும் கொடுத்து, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். குர்ஆன் 2:177
13. மற்ற மனிதர்களின் சொத்துக்களை அபகரிக்கக் கூடாது. லஞ்சம் கொடுக்க கூடாது. குர்ஆன் 2:188
14. உங்களுடன் போர் புரிபவர்களோடே போரிட வேண்டும். அதிலும் வரம்பு மீற கூடாது. போர் செய்யாது விலகிக்கொண்டால், அநியாயக் காரர்கள் மீதே தவிர வேறு எவர் மீதும் பகைமை கொள்ளக் கூடாது. குர்ஆன் 2:190-193
15) எதிரிகளில் ஒருவன் அடைக்களம் கேட்டால் கொடுத்து, பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும். குர்ஆன் 9:6
16) உங்களுடன் போரிட சக்தியற்றவர்களுடன் போர் செய்ய கூடாது. அவர்கள் எதிரியாக இருந்தாலும் சரி. குர்ஆன் 4:90
17) எதிரிகள் சமாதானத்தை விரும்பினால், சமாதனமாக வேண்டும். குர்ஆன் 8:61
18) அப்பாவிகளை பலவீனர்களை காப்பாற்றவே போர் செய்ய வேண்டும். குர்ஆன் 4:75
19) பூமியில் குழப்பம் செய்ய, விவசாயத்தை அழிக்க கூடாது. குர்ஆன் 2:205
20) நல்ல வழியில் அநாதைகளுக்கு, குடும்பத்திற்கு, வழிப்போக்கர்களுக்கு தர்மம் செய். குர்ஆன் 2:215