தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டல்!
பெருந்தோட்ட பகுதிகளில் தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது!
பெருந்தோட்ட பகுதிகளில் திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு புதிய வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான பணிகள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த காலங்களில் தோட்டப்பகுதிகளில்திடீர் தீ விபத்துக்குள்ளான நிலையில் தமது வீீடுகளை இழந்து உள்ள தொழிலாாளர்கள் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அண்மையில் தீ விபத்துக்கள் இடம்பெற்ற டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் 11 வீடுகளும்,லிந்துலை மவுசாஎல்ல கீழ் பிரிவு தோட்டத்தில் 10 வீடுகளும், பம்பரக்கலை நடுப்பிரிவு தோட்டத்தில் 25 வீடுகளும், டிக்கோயா இன்ஜஸ்ட்ரி பிலிங்போனி தோட்டத்தில் 07 என நிர்மாணிப்படவுள்ளன.
10 பேர்ச்சஸ் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வீடமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இவ் வீட்டு திட்டத்தின் பயனாளிகளான குடியிருப்பாளர்கள் விவசாயத்தை மேற்கொள்ளவும், கால்நடைகளை வளர்ப்பதற்கும், சுயத்தொழில்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.