செம்பியன்பற்றில் கள்ளச் சாராய உற்பத்தி: இருவர் வசமாக சிக்கினர்!

செம்பியன்பற்றில் கள்ளச் சாராய உற்பத்தி: இருவர் வசமாக சிக்கினர்!
யாழ்., வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்றுப் பகுதியில், சட்டத்துக்கு முரணாக, வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட இருவர், விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரு வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில், இருவரும் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து, 45 லீற்றர் வடிசாராயம் மற்றும் அதனைத் தயாரிப்பதற்கான உபகரணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மற்றொரு சம்பவத்தில், 65 வயதுடைய வயோதிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து, வடிசாராயம் தயாரிப்பதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் இருவரும், பளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசேட அதிரடிப்படையின், வடமராட்சிக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமார தலைமையிலான அணி, இந்தக் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தது.