ஜ.நா அமைதிப்படைக்கு இலங்கை இராணுவத்தினைரை தயார்படுத்துவதற்கான வாகன தொடரணி.
முல்லைத்தீவு மாவட்டம் ஊடாக மீன்னேரியாவினை சென்றடையும் இராணுவ வாகன அணி!
ஜ.நா அமைதிப்படைக்கு இலங்கை இராணுவத்தினைரை தயார்படுத்துவதற்கான வாகன தொடரணி களப்பயிற்சி நேற்று(12.02.21 வெள்ளிக்கிழமை) யாழில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
20 அதிகாரிகள் மற்றும் கஜாபா ரெஜிமென்ட் படையினர், இலங்கை கவச வாகனப் படைகள், இலங்கை இராணுவ பொறியியல் பிரிவினர், காலாட் படைப்பிரிவின் உள்ளிட்ட 223 பேர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.இதில் 6 கவச வாகனங்கள் உள்ளிட்ட இராணுவ 47 வாகனங்கள் பங்கேற்கின்றன.
மயிலிட்டி, பருத்தித்துறை, நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, பரந்தன், விசுவமடு, புதுக் குடியிருப்பு, முல்லைத்தீவு, நாயாறு, மணலாறு, பதவியா, புல்மோட்டை, திருகோணமலை, கின்னியா, மூதூர், சேருநுவர, கந்தக்காடு,பொலனறுவை ஊடாக 457.2 கி.மீ தூரத்தை இந்த பயிற்சி இராணுவ வகன அணி கடக்கவுள்ளது.
இந்த ரோந்து களப் பயிற்சி இம்மாதம் 16ஆம் திகதி மின்னேரியாவில் முடிவடையும் என இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. பாதுகாப்பு படையில் பங்களிக்கும் நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாலியில் அமைதி காக்கும் பணியில் இலங்கைப் பணிடையினரும் பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.