பொருளாதாரத் தடை வராத விதத்தில் ஜெனிவாச் சவாலை எதிர்கொள்வோம் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ்
இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாத விதத்தில் செயற்படக்கூடிய ஆற்றல் தற்போதைய அரசுக்கு இருக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
‘ஜெனிவா விவகாரத்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் வரக்கூடும். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் வர்த்தகர்கள் மத்தியில் இருக்கின்றது. இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன என்று?’ எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையின் பொருளாதாரத்தில் கைவைப்பதற்கு சில மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன. அவ்வாறான நாடுகளுக்கும், அங்குள்ள அமைப்புகளுக்கும் யதார்த்த நிலைமை குறித்து எடுத்துரைக்கப்பட்டும். அத்துடன், அவர்கள் அறிந்திராத பல தகவல்களை முன்வைப்பதற்கு இலங்கையால் முடியுமாக இருக்கின்றது.
இலங்கையில் முற்போக்கு சக்தியொன்று நாட்டை ஆளும் பட்சத்தில் தமது நாட்டுக்கு எதிரானவற்றை தோற்கடிப்பதற்கே நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எனவேதான், எமக்கு ஏதோவொரு விதத்தில் அழுத்தங்களைகே கொடுப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
பொருளாதாரத்தடை, பொருளார வீழ்ச்சி ஆகியன குறித்து அறிவிப்புகள் வெளி வந்தாலும் அவை நடைமுறைக்குவராத வகையில் பார்த்துக்கொள்ளக்கூடிய – செயற்படக்கூடிய ஆற்றல் இலங்கை அரசுக்கு இருக்கின்றது” – என்றார்.