தடுப்பூசிக்கு பதிலாக இன்ஹேலரை கண்டுபிடித்த இஸ்ரேல்
தடுப்பூசிக்கு பதிலாக கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக்கூடிய இன்ஹேலரை இஸ்ரேல் கண்டுபிடிக்க முடிந்தது என்று வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல் அவிவ் சௌரசுக்கி மெடிக்கல் சென்றர் (Tel Aviv Sourasky Medical Center : Ichilov Hospital), டெல் அவிவ் இச்சிலோவ் மருத்துவமனை (Ichilov Hospital) பேராசிரியர் நாதிர் ஆர்பர் (Prof Nadir Arber) உருவாக்கிய EXO-CD24 இன்ஹேலர், மிதமான மற்றும் கடுமையான நிலைமைகளைக் கொண்ட 30 நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளது. அவர்களில் 29 பேர். 3-5 நாட்களில் முழுமையாக குணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் இன்ஹேலரை உள்ளிழுப்பது கோவிட் நோய்த்தொற்றுகளை 5 நாட்களுக்குள் குணப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த மருந்து இப்போது சோதனைக் கட்டத்தில் உள்ளது என்றும் கோவிட்டுக்கு எதிரான உலகப் போராட்டத்தின் போக்கை மாற்றும் என்றும் வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த மருந்து வெளிநாட்டு தலைவர்களுக்கு “அதிசய மருந்து” என்று வர்ணித்துள்ளார்.
ஊடக அறிக்கையின்படி, மருந்தின் மருத்துவ பரிசோதனைகளுக்கு உதவ கிரேக்கம் ஒப்புக் கொண்டுள்ளது.