இலங்கையில் 10 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேல் தொற்றாளர்.
இலங்கையில் 10 மாவட்டங்களில்
ஆயிரத்துக்கும் மேல் தொற்றாளர்.
யாழில் 312 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் ஆயிரம் தொற்றாளர்களுக்கு அதிக தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு (27,243) மற்றும் கம்பஹா (14,865) ஆகிய மாவட்டங்களே அதிக அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களாகக் காணப்படுகின்றது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, களுத்துறை மாவட்டம் (5,652) மூன்றாவது இடத்திலும், கண்டி மாவட்டம் (4,218) நான்காவது இடத்திலும், குருநாகல் மாவட்டம் (2,288) ஐந்தாவது இடத்திலும், காலி மாவட்டம் (1,977) ஆறாவது இடத்திலும், இரத்தினபுரி மாவட்டம் (1,697) ஏழாவது இடத்திலும், அம்பாறை மாவட்டம் (1,226) எட்டாவது இடத்திலும், மாத்தறை மாவட்டம் (1,102) ஒன்பதாவது இடத்திலும், கேகாலை மாவட்டம் (1,040) பத்தாவது இடத்திலும் உள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் 312 தொற்றாளர்ளுடன் 19ஆவது இடத்தில் உள்ளது.