மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தபடவுள்ளது.
சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் மத்திய நிலையங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான மாணவர்களுக்கு சிகிச்சைபெறும் மத்திய நிலையங்களில் இருந்து பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு வசதிகள் செய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மத்திய நிலையம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிக்கு உட்பட்ட வகையில் அடையாளம் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு வசதிகள் செய்யும் நோக்கில் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வகுப்பறைகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 4513 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.