காதலர் தினம் எப்படி உருவானது ?

கி .பி 200ம் நுற்றாண்டின்மத்தியில் உரோமாப் பேரரசு ஆண்டு வந்த “கிளாடியஸ்” என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வி அடைந்த மன்னனாக இருந்தான் .அவனுடைய காலத்தில் மக்கள் ராணுவத்தில் சேருவதற்கு மறுத்தனர் .இதற்கு காரணம் மக்கள் காதலுடன் சந்தோசமாக வாழ்ந்ததுதான் .என்பதை அறிந்த மன்னன் திருமணம் செய்ய தடை விதித்தான் ….!
இதை வன்மையாக எதிர்த்த பாதிரியார் “வலண்டைன்” (valentine ) நிறைய இரகசிய திருமணம் செய்து வைத்தார் .இதனை அறிந்த மன்னன் கடும் கோபம் கொண்டு இவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தான் சிறையில் இருந்த காலத்தில் சிறைதலைவர் மகளான கண்தெரியாத “அஷ்டோரியக்கும்” காதல் மலர்ந்தது இதையும் அறிந்த மன்னன் அஷ்டோரியசை வீட்டு சிறையில் அடைத்தான் .மறுபுறத்தில் வலண்டைனுக்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டது . இந்த காலத்தில் அஷ்டோரியக்கு இவர் காதல் கவிதை அட்டை ஒன்றை அனுப்பினார் அந்த அருமையான கவிதை இதுதான் ….!
விழி இருந்தும் வழி இல்லாமல் மன்னன் பழிதாங்கிப் போகிறேன்
விழி இழந்து நீ மன வலி தாங்க்காது கதறும் ஒலி கேட்டும் உன்னை மீட்க வழி தெரியாமல் மக்களுக்காக பலி யாடாக போகிறேன் .
நீ ஒளியாய் வாழ பிறருக்கு வழியாய் இரு சந்தோஷ ஒளி உன் கண்ணில் மின்னும்
(**தமிழ்லயா எழுதினார் ? என்று கேட்கப்படாது .. மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)
இது கி பி 270 ஆம் ஆண்டு பெப்பரவரி 14 நாளாம் திகதி எழுதப்பட்டது. இத்தினமே காதலர் தினமாகும் …!
காதலர் தினத்தை அதிகார பூர்வமாக அறிவித்தவர் “போப் கிலேசியஸ்” கி பி 498 ஆண்டு பெப்பரவரி 14 ஆகும் . இந்த உன்னதமான காதலர் தினத்தை உணர்வு பூர்வமாக கொண்டாடுவோம்