வேளாண்மை இயந்திரம் ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் மோதி கோர விபத்து.ஒருவர் பலி.

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து ஒருவர் ஸ்தலத்தில் பலி
பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற வேன் ஒன்று முன்னாள் வந்த வேளாண்மை இயந்திரம் ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் சாரதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
ஸ்தலத்திற்கு விரைந்த 1990 சுவசரிய அவசர சேவை, பொத்துவில் பொலிசார் மற்றும் பொது மக்கள் இணைந்து வேனில் அகப்பட்ட சடலத்தை மீட்டு தற்போது மேலதிக நடவடிக்கைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.