படையினரின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடுக்கும் முயற்சி வெற்றிபெற இடமளியோம்!
படையினரின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடுக்கும் முயற்சி வெற்றிபெற இடமளியோம்! மஹிந்த சூளுரை
போரை வெற்றிகொண்ட போர் வீரர்கள் வெளிநாடு செல்வதையோ அல்லது வெளிநாடுகளில் வேலை செய்வதையோ சாத்தியமற்றதாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
வடமேல் மாகாண கால்வாய் அபிவிருத்தித் திட்டத்தின் மஹகித்துலா மற்றும் மஹகிருல நீர்த்தேக்கங்களின் கட்டுமானப் பணிகளை இன்று ஆரம்பித்து வைத்து, உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நல்லாட்சி அரசு இந்த நாட்டின் போர் வீரர்களுக்கு எதிரான மனித உரிமைத் தீர்மானங்களை ஒப்புக்கொண்டது. இது மாபெரும் துரோகம்.
உலகின் மிக மோசமான பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் போராடிய போதிலும் நாட்டின் அபிவிருத்தியைக் கைவிடவில்லை.
போர் வீரர்கள் வெளிநாடு செல்வதையோ அல்லது வெளிநாடுகளில் வேலை செய்வதையோ சாத்தியமற்றதாக மாற்றும் முயற்சிகள் வெற்றியளிக்க இடம்கொடுக்கமாட்டோம்.
விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் பொருளாதாரத் திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். நாட்டில் குடிதண்ணீர் பிரச்சினையை அடுத்த சில ஆண்டுகளில் தீர்க்க முடியும்” – என்றார்.