இந்திய பெருங்கடல் பகுதியில் ரஷ்யா,இந்தியா, மற்றும் ஈரான் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய பெருங்கடல் பகுதியின் வடபகுதியில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2 நாட்கள் பயிற்சியானது நேற்று தொடங்கியது. இதில், ஈரான் நாட்டு கப்பல்கள் பங்கேற்றன. அவற்றுடன் ரஷ்ய நாட்டு கப்பல்களும் பயிற்சியில் கலந்து கொண்டன.
இந்த பயிற்சியில் குறிப்பிட்ட வகை கப்பல்களுடன் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது என அட்மிரல் கோலம்ரிஜா தஹானி கூறியுள்ளார். இந்த பயிற்சியில் விரும்பினால் வேறு சில நாடுகளும் கலந்து கொள்ளலாம் என அவர் கூறினார்.
இந்த பயிற்சியானது 17 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் (6 ஆயிரத்து 500 சதுர மைல்கள்) பரப்பளவில் நடைபெறும். இதில், கடலில் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொள்ளுதல், வான் பரப்பில் இலக்குகளை நோக்கி சுடுதல், கடத்தப்பட்ட கப்பல்களை விடுவித்தல், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல், கடல் கொள்ளை சம்பவங்களை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஈரான் நாட்டு கடற்படை தளபதி உசைன் கான்சாதி கூறும்பொழுது, இந்த பயிற்சியில் சீன கடற்படையும் கலந்து கொள்ளும் என கூறியுள்ளார்.