சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
சபாநாயகருக்கு தடுப்பூசி ஏற்றல்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.
கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சபாநாயகருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இந்தியாவின் மைத்திரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்றும் செயற்பாடு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
சபாநாயகருக்குத் தடுப்பூசி வழங்கும்போது, இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் இராணுவ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
அயல் நாடுகளின் மற்றும் ஆரோக்கியத்துக்காக இந்தியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளது என இதன்போது இந்தியத் தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
நேற்று 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டனர். இன்று சபாநாயகர் உட்பட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, தம்மைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தடுப்பூசி இறுதியாக வழங்கப்பட்டாலும் பரவாயில்லை என்றும், பொதுமக்களுக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.