பெண்கள் அச்சுறுத்தலிற்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் இந்த இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.
பெண்கள் அச்சுறுத்தலிற்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் 118 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி, உதவி கோரலாமென பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அச்சுறுத்தும் மற்றும் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பில் பெண்கள் தயக்கமின்றி இந்த இலக்கத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். முன்னைய சந்தர்ப்பங்களில் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் தொடர்பான பல சந்தர்ப்பங்களில் தீர்வு கிடைக்காமலிருந்ததை கருத்திற் கொண்டு, புதிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
திருமணமான பின்னரும் ஒரு பெண்ணை அச்சுறுத்தி (blackmailing) வந்த ஒருவர், பெண்ணின் முறைப்பாட்டையடுத்து கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இணையத்தளங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல் சிக்கல்களை எதிர்கொண்டாலும் 118 எண்ணுக்கு அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதுபோன்ற பிரச்சினைகளை விவேகத்துடன் கையாள்வதாக உறுதியளித்தார்.
அனைத்து முயற்சிகளையும் எடுத்து நாட்டின் பெண்களை இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உறுதியளித்தார்