1 லட்சம் கோடி பணத்தை கொள்ளையடிக்க வவுனியா வந்த கும்பல் கைது
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு டிரில்லியன் ரூபாய் (ஒரு லட்சம் கோடி ரூபாய்) பணத்தை பெற வவுனியாவில் உள்ள நெலும்குளம் குமாங்குளம் பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவரைக் கடத்திச் செல்ல வவுனியாவுக்கு வந்த பிலயந்தலையைச் சேர்ந்த ஒரு குழுவை வவுனியா போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குழுவில், தலைமை தாங்கிய பிலியந்தலவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், ஒரு சிறை அதிகாரி உட்பட 6 பேர் அடங்குவதாக வவுனியா காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, வவுனியாவில் குமாங்குளத்தில் வசிக்கும் கந்தசாமிக்கு அமெரிக்காவிலிருந்து இனம் தெரியாத ஒருவரினால் ஒரு டிரில்லியன் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒரு இயக்கத்துக்கு செல்ல வேண்டிய பணம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், தனது கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்திற்கு முறையான உரிமைகளைக் காட்ட சம்பந்தப்பட்ட நபர் தவறியதற்காகவும், பணத்தை அனுப்பிய நபர் குறித்த சரியான தகவல்களை வழங்க தவறியதற்காகவும், குமாங்குளத்தில் வசிக்கும் கந்தசாமி என்பவருக்கு டிரில்லியன் ரூபாயை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது.
இதற்கிடையில், கந்தசாமி மற்றொரு குழுவுடன் இணைந்து பணத்தை பெற கடுமையாக முயன்றுள்ளார், ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.
பின்னர், இந்த சம்பவம் பற்றி அறிந்த அவரது நண்பர் ஒருவர் இந்த சம்பவம் குறித்து மற்றவர்களுக்கு தகவல் அளித்து, கந்தசாமியிடம் பேசியதோடு, சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்துள்ளதாகவும், அதற்காக கந்தசாமியின் கையொப்பம் தேவை என்றும் அவரிடம் பலமுறை கூறியுள்ளனர். ஆனால், காந்தசாமி பல்வேறு விஷயங்களைக் கூறி மழுப்பி கொழும்பு செல்ல மறுத்துள்ளார்.
கோபமடைந்த குழு இரண்டு வாகனங்களில் வவுனியாவுக்கு வந்து கந்தசாமியைக் கடத்தி டிரில்லியன் ரூபாய் பணத்தை பெற முயன்றுள்ளது. ஆனால், மத்திய வங்கி அப் பணத்தை எவரும் பெற முடியாமல் தடை விதித்துள்ளது.
இருப்பினும், அவரை கடத்த ஒரு குழுவினர் வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கந்தசாமி தலைமறைவாகியுள்ளார்.
இருப்பினும் பின்னர் கந்தசாமியை தேடிக் கண்டு பிடித்த அக் குழு , அவரை அழைத்துச் செல்லும் போது தனக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணர்ந்து உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி பூவரசம்குளம் போலீசாரிடம் சென்று முறையிட்டுள்ளார். பின்னர், பூவரசங்குளம் ஓ.ஐ.சி சமிந்த எதிரிசூரிய உள்ளிட்ட காவல்துறை குழு கந்தசாமியைக் கடத்த வந்த 6 பேரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா காவல் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளது.
அவர்கள் வந்த இரண்டு வாகனங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பின்னர், வவுனியா காவல்துறையின் பதில் ஓ.ஐ.சி மனோஜ் குமார அழகியவண்ண இந்த விவகாரத்தை விசாரித்து சந்தேக நபரையும் ஐந்து சந்தேக நபர்களையும் வவுனியா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்றம் பிரதான சந்தேக நபரையும் ஐந்து சந்தேக நபர்களையும் இந்த மாதம் 23 ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது.
வவுனியா பதில் ஓ.ஐ.சி மனோஜ் குமார அழகியவண்ண மற்றும் பூவரசங்குலம் ஓ.ஐ.சி சமிந்த எதிரிசூரிய தலைமையிலான குழு வவுனியா எஸ்.எஸ்.பி திஸ்ஸ லால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டது.